Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையத்தில் தீ பறக்கும் "தளபதி 63" பர்ஸ்ட் லுக் போஸ்டர்..! வெளியிட்டது யார் தெரியுமா?

Advertiesment
Thalapathi 63
, செவ்வாய், 22 ஜனவரி 2019 (13:33 IST)
தளபதி 63 படத்தின் படத்தின் பரஸ்ட் லுக் என்று கூறி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 


 
தெறி, மெர்சல் போன்ற மெகா ஹிட் வெற்றி  படங்களை தொடர்ந்து அட்லி, விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் தளபதி 63. சர்கார் வெற்றிக்கு பிறகு தளபதி 63 எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது . 
 
விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் .   இந்த திரைப்படத்தில் கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். 

Thalapathi 63

 
சமீபத்தில்  இப்படத்தின் பூஜை போடப்பட்டது. தற்போது செட் அமைக்கும் பணி தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்புகளுக்கான வேலைகளும் ஆரம்பமாகவுள்ளது.  இந்நிலையில் தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் என்று இணையத்தில் சில புகைப்படங்கள் பெரும் வைரலாக பரவி வருகிறது. 

Thalapathi 63

 
ஆனால் இது விஜய் ரசிகர்கள் உருவாக்கிய பேன் மேட் போஸ்டர் தான். படக்குழு சார்பில் இன்னும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தளபதி ரசிகர்களால் உருவாக்கப்பட்ட இந்த போஸ்டர் மக்களிடையே நல்ல வரவேப்பை பெற்று வருகிறது என்பது கூடுதல் தகவல் . 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கி 2 படம் நிச்சயமாக வரும் - முருகதாஸ்