Publish Date: Mon, 23 Mar 2020 (08:29 IST)
Updated Date: Mon, 23 Mar 2020 (08:35 IST)
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை நடித்து முடித்த கையோடு அடுத்த படமான தளபதி 65 படத்திற்கு தயாராகிவிட்டார். இப்படத்திற்காக பல முன்னணி இயக்குனராக்களிடம் கதை கேட்டுவந்த விஜய் சுதா கங்காரா இயக்கத்தில் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி நிமிடத்தில் அடுத்து விஜய்யை இயக்கப்போவது சுதா கொங்கரா இல்லை என தகவல்கள் வரதுவங்கியது. மேலும் விஜயின் அடுத்த படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார் எனவும் செய்திகள் வரத்துவங்கிவிட்டது.
இந்நிலையில் தற்போது சுதா கொங்கராவை விஜய் நீக்கியதற்கான காரணம் தெரியவவந்துள்ளது. சுதா கொங்கரா கூறிய கதையில் விஜய்க்கு பெரிய அளவில் திருப்தி இல்லையாம். இதனால், படத்தின் கதை எனக்கு சரப்பட்டுவரவில்லை என கூறிய விஜய் ஏ.ஆர் முருகதாஸ் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.