Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஏ’ சான்றிதழ், 3 மணி நேர ரன்னிங் டைம்.. தேறுமா பிரபாஸின் ‘சலார்’ திரைப்படம்..!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (18:14 IST)
பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் என்றும் அதாவது 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த படத்திற்கு ’ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதை அடுத்து 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

3 மணி நேர ரன்னிங் டைம் என்பதை மைனஸ் ஆக கருதப்படும் நிலையில் ’ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது மேலும் மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.  கடந்த சில ஆண்டுகளாக வெளியான பிரபாஸ் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததை அடுத்து இந்த படத்தை தான் மலைபோல் நம்பியுள்ளார். இந்த படமும் பிரபாஸுக்கு தோல்வியடைந்தால் அவரது திரையுலக வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று  பல ரிஸ்க்கான காட்சிகளில் டூப் இல்லாமல் பிரபாஸ் நடித்துள்ள நிலையில் இந்த படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்தில் பிரித்விராஜன் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments