Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு வசூல் கணக்கு…. விண்வெளியில் வடைசுடும் புகைப்படத்தைப் பகிர்ந்த துணிவு விநியோகஸ்தர்!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (09:16 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில்  வெளியான  படம் வாரிசு. இப்படத்தில் இவருடன் இணைந்து ராஷ்மிகா, குஷ்பு,  பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட  நடிகர்கள் நடித்திருந்தார். இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். தில்ராஜு தயாரித்துள்ளார். எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் வசூலில் சாதனை படைத்து வருவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்புகளாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட கணக்கின் படி 7 நாட்களில் 210 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அறிவித்தது. இந்த கணக்கு நம்பமுடியாததாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் துணிவு படத்தின் விநியோக பொறுப்பில் உள்ள ராகுல் என்பவர் இது சம்மந்தமாக விண்வெளியில் பாட்டி ஒருவர் வடைசுட்டு விற்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு ட்ரோல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… ரைசா வில்சனின் அழகிய க்ளிக்ஸ்!

மினி ஸ்கர்ட் உடையில் மாடர்ன் லுக்கில் ஜொலிக்கும் அதுல்யா ரவி!

அமைச்சர்களுக்காக சபாநாயகர் பேசும்போது, எனக்காக அ.தி.மு.க., வினர் பேசக்கூடாதா?' வானதி

சிம்புவுக்காகத் தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்ட சந்தானம்.. ஏன் தெரியுமா?

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

அடுத்த கட்டுரையில்
Show comments