Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

vinoth
வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (13:44 IST)
தமிழ் சினிமாவில் நாயகிகளின் பிரகாச காலம் என்று பார்த்தால் 5 முதல் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு அக்கா, அம்மா வேடத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகைதான் திரிஷா.

ஜோடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இப்போதும் பரபரப்பான கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் பொன்னியின் செல்வன் வெற்றியால் மீண்டும் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. சமீபகாலமாக அவர் விஜய், அஜித் மற்றும் சூர்யா என அடுததடுத்து முன்னணி நடிகர்களோடு நடித்து வருகிறார்.

நேற்று அவர் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸான நிலையில் இன்று திடீரென சமூகவலைதளப் பக்கத்தில் கோபமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஷப்பா…  டாக்ஸிக் மனிதர்களே…நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையை வாழ்ந்து நிம்மதியாக தூங்குகிறீர்கள்? சும்மா உட்கார்ந்துகொண்டு அடுத்தவர்களைப் பற்றி எதையாவது பதிவிடுவதுதான் உங்கள் வேலையா? உங்களுக்காகவும், உங்களை சார்ந்தவர்களுக்காகவும் நான் உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன். பெயர் வெளியிடாத கோழைகளே… கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments