Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி ஸ்டாலின் புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (12:07 IST)
நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினும் புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். 

 
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார் அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமே இரங்கல் தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்பட தமிழ் நடிகர்கள் பலரும் புனித் ராஜ்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினும் புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். இவருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்றிருந்தார். 
 
இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், முத்தமிழறிஞர் - கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் குடும்பங்களுக்கு இடையேயான நட்பின் தொடர்ச்சியாக புனித் அவர்கள் இருந்தார். அவரின் மரணம் பேரதிர்ச்சியை தந்தது. பெங்களூருவில் அவரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர், கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தினோம். புனித் என்றென்றும் போற்றப்படுவார் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எதிர்பார்ப்புகளை உருவாக்கிய சூர்யாவின் ‘ரெட்ரோ’… முன்பதிவு தேதி அறிவிப்பு!

ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‘ஸ்டார்’ பட இயக்குனர் இளன்!

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments