Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வி ஜே சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு அஜித் பட டைட்டிலா?

vinoth
ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (10:41 IST)
தற்போதைய காலகட்டத்தில் சினிமா நடிகர்களுக்கு இணையான பிரபலத்தை சமூகவலைதளப் பிரபலங்கள் பெற்று வருகின்றனர். அப்படி பிரபலமாகும் சமூகவலைதள பிரபலங்கள் அடுத்த கட்டமாக சினிமாவில் கால்பதிக்கின்றனர். அது பரிதாபங்கள் கோபி, சுதாகர் தொடங்கி பலரை உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் வி ஜே சித்து.

சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டிராகன் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை வேடத்தில் அவர் நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதையடுத்து தற்போது அவர் கதாநாயகனாக ப்ரமோஷன் பெறுகிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க வுள்ள படத்தில் கதாநாயகனாக அறிமுகமாவதோடு மட்டுமில்லாமல், அவரே அந்த படத்தை இயக்கவும் உள்ளாராம்.  இதற்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் அவரை வைத்து ப்ரோமோ ஷூட் ஒன்றை படக்குழு படமாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு அஜித்தின் ஹிட் பட டைட்டிலான ‘அமர்க்களம்’ என்பதை வைக்கலாமா எனப் படக்குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எதிர்பார்ப்புகளை உருவாக்கிய சூர்யாவின் ‘ரெட்ரோ’… முன்பதிவு தேதி அறிவிப்பு!

ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‘ஸ்டார்’ பட இயக்குனர் இளன்!

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments