Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் வலிமை பர்ஸ்ட் லுக்!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (18:09 IST)
அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் தயாரிக்கும் மற்ற படங்களுக்கான வேலைகள் மட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் எனக் கேட்டு தர்மசங்கடமான சூழ்நிலைகளை உருவாக்கினர். அதையடுத்து அஜித் தலையிட்டு அவர்களை அடக்கும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் இப்போது வலிமை சம்மந்தமான அப்டேட் குறித்து ஆலோசிப்பதற்காக தயாரிப்பாளர் போனி கபூர் மும்பையில் இருந்து சென்னை வந்து அஜித் மற்றும் இயக்குனர் ஹெச் வினோத்தை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து படம் சம்மந்தமாக முதல் அப்டேட்டாக மோஷன் போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ள படக்குழு அதை அஜித்தின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளதாம். அதைப் பார்த்த அஜித் போஸ்டர்களைப் பாராட்டி மார்ச் மாதம் கடைசி வியாழக்கிழமை (25 ஆம் தேதி ) வெளியிட சொல்லியுள்ளாராம். மேலும் ஏப்ரல் 30 ஆம் தேதி டீசர் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments