Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது வலிமை ஓடிடி டிரைலர்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (10:24 IST)
வலிமை திரைப்படம் இம்மாதம் 25 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதை அடுத்து புதிய ட்ரைலர் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் வலிமை. இந்த படத்தை போனிக்கபூர் தயாரித்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிர எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.

தற்போதும் திரையரங்குகளில் வலிமை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த வாரம் ஓடிடியில் வலிமை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வலிமை ஓடிடி உரிமையை பெற்றுள்ள ஜீ5 ஓடிடி தளம் அடுத்த வாரம் மார்ச் 25 அன்று படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வலிமை ஓடிடி ரிலீஸுக்காக சென்னையின் முக்கியப் பகுதியான YMCA மைதானத்தில் 10000 அடியில் பிரம்மாண்ட கட் அவுட்டை ஜி நிறுவனம் வைத்துள்ளது.

வலிமை படம் ஓடிடியில் வெளியாவதை முன்னிட்டு இப்போது புதிய டிரைலரை ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நான்கு மொழிகளில் வரும் மார்ச் 25 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

மகாபாரதம் படத்தோடு சினிமாவில் இருந்து ஓய்வு?… ராஜமௌலி முடிவு!

மீண்டும் காமெடி ஏரியாவுக்குள் செல்லும் சிவகார்த்திகேயன்… முக்கிய வேடத்தில் மோகன்லால்!

ரஜினியை இயக்குகிறாரா ஹெச் வினோத்..? சமீபத்தில் நடந்த சந்திப்பு!

பான் இந்தியா சினிமா என்பதே ஒரு மோசடிதான்… இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் காட்டமான விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments