Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் நடிக்கும் வாரிசு… மீண்டும் ஐதராபாத்தில் முகாமிட்ட படக்குழு!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (10:26 IST)
விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. இந்த போஸ்டர்களில் விஜய் மிகவும் ஸ்டைலாகவும் இளமையாகவும் இருப்பதாக ரசிகர்கள் சிலாகித்தனர். கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது மீண்டும் ஐதராபாத்தில் சில காட்சிகளைப் படமாக்க படக்குழு ஐதராபாத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments