Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட் தொடரின் குரல் கலைஞரான விக்னேஷ் G!

J.Durai
புதன், 29 மே 2024 (10:39 IST)
பாகுபலி மற்றும் மகிழ்மதி உலகில் கேள்விப்படாத, கண்டிராத மற்றும் சாட்சியமில்லாத பல நிகழ்வுகளும் கதைகளும் உள்ளன. டிஸ்னி + ஹாட்ஸ்டாரும் கிராஃபிக் இந்தியாவும் சமீபத்தில் இந்திய ரசிகர்களின் விருப்பத்திற்குரிய திரைப்பட ஃப்ராஞ்ச்சைஸான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸின் 'பாகுபலி: கிரீடம் ஆஃப் ப்ளட்' என்ற அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்தின. 
 
இது பாகுபலியும் பல்வாழ்தேவனுவும் கைகோர்த்து மாபெரும் சாம்ராஜ்யம் மகிஸ்மதியையும் அதன் சிம்மாசனத்தையும் அதன் மிகப்பெரிய அச்சுறுத்தலான, மர்மமான போர்வீரன், ரக்ததேவனிடமிருந்து பாதுகாக்கும் கதையாகும். 
 
கிராஃபிக் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பான பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட், தொலைநோக்குப் பார்வையுள்ள S.S. ராஜமௌலி, ஷரத் தேவராஜன், ஷோபு யார்லகட்டா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது, ஜீவன் ஜே. காங், நவின் ஜான் ஆகியோரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது.
 
பெரிதும் விரும்பப்படும் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசுவது அதற்கே உரிய சவால்களைக் கொண்டதாகும். அத்தகைய ஒரு பாத்திரமான பாகுபலி சிறந்த நடிகர்களில் ஒருவரால் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ். பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட் தொடரின் தமிழ் டப்பிங் பதிப்பிற்குக் குரல் கொடுத்த விக்னேஷ் G, முக்கியக் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுப்பதற்கான முன் தயாரிப்புகள் குறித்து தமிழ் டப்பிங் கலைஞர் விக்னேஷ் G பேசியது......
 
 “பாகுபலி கதாபாத்திரத்தின் மூலம் பிரபாஸ் சார் மிகச் சிறப்பான பணியைச் செய்து பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அனிமேஷன் பதிப்பில் அதைத் தழுவி அதே பிரமாண்டத்தை உருவாக்குவது உண்மையில் கடினமான வேலை. பாகுபலியை மிகவும் பிரியத்திற்கு உரியதாக மாற்றியது எதுவோ அதன் சாராம்சத்தைப் பிரதிபலிக்கும் அதே நேரத்தில் கதாபாத்திரத்திற்கு எனது சொந்த அம்சத்தையும் கொண்டுவருவது எனக்கு முக்கியமானதாக இருந்தது. 
 
பிரபாஸ் சாரின் சித்தரிப்பை ஆய்வு செய்வதில் நான் நிறைய நேரம் செலவிட்டேன். அவர் பாகுபலியை திரையில் எவ்வாறு உயிர்ப்பிக்கிறார் என்பதைப் பற்றிய ஒவ்வொரு சிறு விவரத்தையும் புரிந்துகொள்ள முயன்றேன். மேலும் பாத்திரத்தில் எனது சொந்த பாணியையும் ஆளுமையையும் புகுத்தி அதை எனக்குரியதாக்கவும் முயற்சி செய்தேன். அது நிச்சயமாக ஒரு சவாலாக இருந்தது, ஆனால் நம்பமுடியாத அளவிற்கு மதிப்பிற்குரிய அனுபவமாகவும் இருந்தது.” என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

யார் வந்தா என்ன?... வணங்கான் படத்தை துணிந்து இறக்கும் இயக்குனர் பாலா?

மீண்டும் மீண்டுமா?... விடுதலை 2 ஷூட்டிங்கைத் தொடங்கும் வெற்றிமாறன்!

சிம்பு & தேசிங் இணையும் படத்தை தயாரிக்கப் போகும் துபாய் தொழிலதிபர்..!

அமரன் சர்ச்சை: முகுந்த் போர் குற்றவாளின்னு நான் சொல்லல.. இயக்குனர் அப்படி காட்டியிருக்கார்! - திருமுருகன் காந்தி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments