Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளிமயில்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (13:55 IST)
சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படமாக வள்ளிமயில் உருவாகி வருகிறது.

டிஷ்யூம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அடுத்தடுத்து வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். ஒரு கட்டத்தில் நான் படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். முதலில் அவர் நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அவர், இப்போது தன் படங்களுக்கும் மற்ற இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்து வருகிறார்.

இதையடுத்து இப்பொது ரத்தம் மற்றும் மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அவர், அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் வள்ளிமயில் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மே 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments