Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவாரணப் பொருட்களில் விஜய் படங்கள் விவகாரம்! - புஸ்ஸி ஆனந்த் புதிய உத்தரவு

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (14:59 IST)
சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்த கனமழையால், சென்னையில் உள்ள  பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன.  மக்களின் இயல்பு வாழ்க்கையயும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு  அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர்.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு நிவாரண உதவிகள், அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள், மாணவர்களுக்கு  நோட்டுப் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன.

இதற்கிடையே சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவளித்தனர். அப்போது,  நிர்வாகி ஒருவர் விஜய்யின் புகைப்படத்தை விளம்பரத்திற்குப் பயன்படுத்தியதாக சர்ச்சையானது.

இதையடுத்து, இன்று சென்னை, மேற்கு தாம்பரம் சத்துவ பெரியார் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  நலத்திட்ட உதவிகள்   வழங்கப்பட்டன.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.ம.இ.,பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,

‘’விஜய்-ன் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து  மக்களுக்கு உதவி செய்து வருகிறோம்.  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தினரை தொடர்புகொண்டால் எங்களால் முடிந்த  உதவிகள் செய்வோம்'' என்று தெரிவித்தார்.

மேலும்,  ''வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கும்போது புகைப்படங்கள் ஒட்டி வழங்கக்கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments