Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி !

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (18:33 IST)
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களுள் முக்கியமானவராக பார்க்கப்படும் நடிகர் விஜய் சேதுபதிக்கு நடிப்பில் அத்தனையும் கை வந்த கலை. ஹீரோவாக களத்தில் இறங்கி டூயட் பாடி ரொமான்டிக் ஹீரோவாக வலம் வருவதுடன் அவ்வப்போது வில்லனாகவும் அவதாரமெடுத்து தன் அபார நடிப்பு திறமையை பார்த்து ரசிகர்களை பிரம்மிக்க செய்திடுவார். 

அந்தவகையில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளிவந்த விக்ரம் வேதா, பேட்ட போன்ற படங்கள் அவரது சினிமா வாழ்க்கையை உச்சத்தில் கொண்டு நிறுத்தியுள்ளது. அதையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி  நடிக்கிறார். இதையடுத்து தற்போது  தெலுங்கில் சுகுமார் இயக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
இப்படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக  ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இனி விஜய் சேதுபதியின் வில்லத்தன புகழ் டோலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் என எதிர்பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments