Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஜனநாதனின் முழு மருத்துவ செலவையும் ஏற்ற விஜய் சேதுபதி!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (16:20 IST)
இயக்குனர் ஜனநாதன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் மருத்துவ செலவு முழுவதையும் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டுள்ளாராம்.

இயற்கை, ஈ,  பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.பி. ஜனநாதன். இடதுசாரி சிந்தனைக் கொண்டவராக அறியப்படும் இவருக்கு சினிமா உலகில் மிகப்பெரிய மரியாதை உண்டு. தற்போது அவர் இயக்கிவரும் லாபம் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்ட உதவி இயக்குனர்கள் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனநாதனின் உற்ற நண்பரான விஜய் சேதுபதி அவரின் முழு மருத்துவ செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லியுள்ளாராம். மேலும் நேற்றில் இருந்து மருத்துவமனையில் ஜனநாதன் உடனேயே இருந்து வருகிறாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments