Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடிகளை கொடுத்து "தாராள பிரபு" படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (17:09 IST)
பாலிவுட்டின் முக்கிய வளரும் நட்சத்திரமாக வலம் வரும் ஆயுஸ்மான் குர்ரானா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் விக்கி டோனர். விந்து தான விழிப்புணர்வு பற்றிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு விருதுகளையும் வாரி குவித்தது.

இதையடுத்து இந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யும் ஆர்வம் இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் அதிகரித்தது. அந்தவகையில் தமிழில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக தடம் படத்தில் நடித்த தன்யா ஹோப் நடித்துள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத், ஷான் ரோல்டன், விவேக் - மெர்வின், மேட்லி ப்ளூஸ், பரத் ஷங்கர், ஊர்கா குழு, கபீர் வாசுகி மற்றும் இன்னோ கங்கா என மொத்தம் 8 இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரிக்கியுள்ள நிலையில் சற்றுமுன் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை 2.25 கோடி கொடுத்து விஜய் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments