Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 2 ஆம் தேதி சென்சாருக்கு செல்லும் விஜய்யின் வாரிசு திரைப்படம்!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (15:27 IST)
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவை காண விஜய் ரசிகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 5000 ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் விழாவைக் கண்டு களித்தனர்.

இதையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் பாதி 1மணிநேரம் 25 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 27 நிமிடமும் ஓடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 2ஆம் தேதி இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’என் வீட்டை ஆர்யா இடிச்சிட்டான்…” – சந்தானம் பகிர்ந்த ஜாலி தகவல்!

ப்ரதீப் ரங்கநாதனுக்கு இவ்ளோ பெரிய Fan Base ஆ? தண்ணீர் பந்தல் திறந்த ரசிகர்கள்!

கடைசியா ஒரு ஆட்டம்.. வெளியானது Squid Game Season 3 டீசர்!

அடிபொலியானு.. ட்ரெய்லரே தெறிக்குதே! தமிழிலும் எதிர்பார்ப்பை தரும் மோகன்லாலின் ‘தொடரும்’!

கிரவுட் பண்டிங் மூலமாக உருவாகியுள்ள ‘மனிதர்கள்’… அறிமுக இயக்குனர் ராம் இந்திராவின் வித்தியாச முயற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments