Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆவது வாரத்தில் அமெரிக்காவில் மாஸ் காட்டும் விக்ரம்… 20 கோடி வசூலை தாண்டி சாதனை

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (10:07 IST)
விக்ரம் திரைப்படம் அமெரிக்க திரையரங்குகளில் வசூல் சாதனைப் படைத்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த படம் கடந்த 13 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகிறது. இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூலமாக கிட்டத்தட்ட 300 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவில் மட்டும் இல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூட வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. வெளியாகி 3 வாரங்கள் சென்றுள்ள நிலையில் அமெரிக்காவில் 2.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 21 கோடி) ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது வாரத்தில் 60 திரைகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருப்பதாகவும் விரைவில் 3 மில்லியன் டாலர்கள் வசூலிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments