ஷங்கர் , வெற்றிமாறனுடன் மோதும் நடிகர் விக்ரம்.. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
வியாழன், 26 செப்டம்பர் 2024 (18:38 IST)
இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் வெற்றிமாறன் படங்கள் வெளியாகும் தேதியில் விக்ரம் நடித்த படம் வெளியாக இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் "வீர தீர சூரன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அதே தேதியில் ஷங்கர் இயக்கியுள்ள "கேம் சேஞ்சர்" மற்றும் வெற்றிமாறன் இயக்கியுள்ள "விடுதலை 2" போன்ற படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு பெரிய படங்களுடன் விக்ரம் படமும் மோத இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ள இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும், இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை உள்பட பல இடங்களில் நடந்து வந்த நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த படத்தின் மொத்த படைப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் இந்த கட்டப்பா?... ‘ஸ்பின் ஆஃப்’ திரைக்கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத்!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ஜப்பானிய நடனக் கலைஞர்!

யாத்திசை இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சசிகுமார்!

இன்னும் விற்பனை ஆகாத முதல் பாக சேட்டிலைட் வியாபாரம்.. ஆனாலும் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு!

தில்லுக்கு துட்டு டைப் காமெடி ஹாரர் படமாக பிரபாஸின் ‘தி ராஜா சாப்’… டிரைலர் எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments