Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரியில் தொடங்கும் விக்ரம்மின் அடுத்த பட ஷூட்டிங்!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (07:39 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.  படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விக்ரம்முக்கு எந்த படமும் பெரியளவில் கைகொடுக்கவில்லை. அதனால் தங்கலான் படத்தை பெரிதாக நம்பியுள்ளார்.

இந்நிலையில் தங்கலான் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுவதால், இப்போது விக்ரம் அடுத்து இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற உள்ளாராம். இதன் மூலம் மீண்டும் தன்னுடைய ஸ்டார் இமேஜை உயர்த்திக் கொண்டுள்ளார் விக்ரம்.

இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் ஷூட்டிங் ஜனவரி மாத இறுதியில் தங்கலான் ரிலீஸூக்குப் பிறகு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘டூரிஸ்ட் பேமிலி’… பிளாக்பஸ்டர் ஹிட்!

தக் லைஃப் படத்தின் டிரைலர் & இசை வெளியீட்டு விழா அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ஓடிடியில் வெளியானது சுந்தர் சி & வடிவேலு காம்போவின் ‘கேங்கர்ஸ்’!

சூர்யவம்சம் 2 படத்தில் சிவகார்த்திகேயன்… தேவயானி கணவர் சொல்லும் ஐடியா!

சூர்யா 46 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments