Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷால்- ஹரி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

விஷால்- ஹரி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்
, சனி, 15 ஜூலை 2023 (13:19 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால்.இவர் நடிப்பில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆயுத பூஜைக்கு ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில் விஷாலின் 34 வது படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

விஷாலின் 34 வது படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இருவரின் காம்பினேசனில் உருவான தாமிரபரணி படத்தை அடுத்து,  ஹரி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஷால், ஸ்ருதிஹாசன், ராதிகா சரத்குமார், சத்யராஜ் முகேஷ் திவாரி ஆகியோரின் நடிப்பில்  வெளியானது  பூஜை என்ற படம். அதன் பிறகு விஷால்34  படத்திற்கு  இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு டிஎஸ்பி எனும் தேவிஸ்ரீபிரசாத் இசையமைவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பவன் கல்யான், சன்னி லியோனை விமர்சித்த நடிகை ரோஜா!