Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூசு தட்டப்படும் கொரோனா குமார் படம்… சிம்புவுக்கு பதில் நடிக்கப் போவது இவரா?

vinoth
செவ்வாய், 5 மார்ச் 2024 (07:06 IST)
சிம்புவின் சினிமா கிராஃப் மாநாடு படத்துக்கு பிறகு மேல்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாக சிம்பு இப்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு ஐசரி கணேஷ் தயாரிப்பில் 2  படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை போட்டிருந்தார் சிம்பு. அதன்படி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இன்னொரு படமாக தொடங்கப்பட்ட இயக்குனர் கோகுலின் ‘கொரோனா குமார்’ திரைப்படத்தில் அவர் நடிக்காமல் வெளியேறினார். இது சம்மந்தமாக சிம்பு மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு இடையில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் கோகுல் சிங்கப்பூர் சலூன் படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட கொரோனா குமார் திரைப்படம்தான் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments