Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் வீட்டு நிகழ்ச்சியில் தான் என் காதலியை சந்தித்தேன் - விஷ்ணு விஷால் கூறிய ரகசியம்!

Webdunia
புதன், 6 மே 2020 (13:09 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் விவாகரத்து செய்துகொண்டனர். இதையடுத்து கேரியரில் அதீத கவனத்துடன் இருந்த வந்த விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலிக்க துவங்கினார்.

விரைவில் இவர்க இருவரும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக  சமீபத்தில் ஜுவாலா கட்டா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் விஷ்ணுவிஷால் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் " நீங்கள் ஜுவாலா கட்டாவை எப்படி சந்தித்தீர்கள் என கேட்டதற்கு " நடிகர் விஷால் தங்கையின் திருமண சங்கீத் நிகழ்ச்சியில் தான் ஜுவாலா கட்டாவை முதன் முதலாக சந்தித்தாக பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்