Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் நிஜமான உண்மை! வைரமுத்து-சின்மயி சர்ச்சை குறித்து செல்வராகவன்

Webdunia
புதன், 29 மே 2019 (23:27 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'என்.ஜி.கே' திரைப்படத்தில் முதலில் வைரமுத்துதான் பாடல்கள் எழுதுவதாக இருந்தது. முதல்கட்ட போஸ்டரிலும் அவரது பெயர் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து வந்த போஸ்டர்களில் வைரமுத்து பெயர் மிஸ் ஆகியிருந்தது
 
இதனையடுத்து சின்மயி மீடு சர்ச்சையில் வைரமுத்து சிக்கியதால்தான், தனது படத்தில் இருந்து வைரமுத்துவை செல்வராகவன் தூக்கிவிட்டதாக கூறப்பட்டது. ஏற்கனவே ஒரு பேட்டியில் இனிமேல் மீடு சர்ச்சையில் சிக்கியவர்களுடன் நான் பணியாற்ற மாட்டேன் என்று செல்வராகவன் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் இதுகுறித்து செல்வராகவன் விளக்கமளித்துள்ளார். அதில், வைரமுத்து படத்தில் இருந்து நீக்கப்பட்டது தற்செயலாக நடந்த ஒரு விஷயம், இதற்கும் சின்மயி மீடூ விஷயத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால் அதே நேரத்தில் 'மீடு' சர்ச்சையில் சிக்கியவர்களை எனது படத்தில் பணிபுரிய நான் அனுமதிப்பதில்லை என்பதும் நிஜமான உண்மைதான் என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments