Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி வி குமார் தயாரிப்பில்… படமாகும் எழுத்தாளர் தமிழ்மகனின் நாவல் !

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:08 IST)
தயாரிப்பாளர் சிவி குமார் வரிசையாக எழுத்தாளர் தமிழ்மகனின் நாவல்களை படமாக்கும் உரிமையைக் கைப்பற்றி வருகிறார்.

தமிழின் அறிவியல் புனைகதை எழித்தாளர்களில் முக்கியமானவர் தமிழ்மகன். அவரின் கொற்றவை நாவல் இப்போது படமாக்கப்பட்டு ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் அவரின் மற்றொரு அறிவியல் புனைகதை நாவலான நான் ரம்யாவாக இருக்கிறேன் நாவலை சி வி குமார் அடுத்து படமாக்க உள்ளார். இதை இயக்குனர் பரத் மோகன் இயக்குகிறார்.

இது சம்மந்தமாக எழுத்தாளர் தமிழ்மகன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘நான் ரம்யாவாக இருக்கிறேன்' அறிவியல் புனைகதை திரைப்படமாகிறது. இனிய நண்பர் சி.வி.குமார் தயாரிப்பில் நண்பர் பரத் மோகன் இயக்கத்தில் படம் உருவாகிறது. மற்ற தொழில் கலைஞர்கள் விவரம் நிறுவனத்தின் மூலம் முறைப்படி அறிவிக்கப்படும்.

யாக்கை திரி படத்தை இயக்கிய பரத் மோகன் கவித்துவமான மனமும் புயல் தனமான வேகமும் கொண்டவர். போட்டான் போட்டானாக ( அணு அணுவாக ) திரைக்கதையை மெருகேற்றி இருக்கிறார்.

தமிழ் சினிமாவுக்குப் புதிய திரைக்கதைகளை அறிமுகப்படுத்த விரும்பும் தயாரிப்பாளர் + இயக்குனர் கூட்டணி எனக்கு கிடைத்த வரம். புதிய அலுவலகம் போட்டு வேலைகள் படு வேகமாக நடக்க.... மகிழ்ச்சி.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

அடுத்த கட்டுரையில்
Show comments