Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா முதல்வரை சந்தித்த யாஷ் மற்றும் மனைவி!

Webdunia
வியாழன், 5 மே 2022 (11:46 IST)
நடிகர் யாஷ் மற்றும் மனைவி ராதிகா பண்டிட் புதன்கிழமை காலை கோவா முதல்வர் பிரமோத் சாவந்தை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். 

 
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார் யாஷ்.
 
கேஜிஎஃப் 2-ன் வெற்றிக்குப் பிறகு யாஷ் சமீபத்தில் கோவாவில் தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.  அங்கு அவர் கேஜிஎஃப் படத்தின் வெற்றியை கொண்டாடினார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் தற்போது 1000 கோடி வசூல் செய்து திரையரங்குகளில் வசூலில் சாதனை படைத்துள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. 
 
இந்நிலையில் நடிகர் யாஷ் மற்றும் மனைவி ராதிகா பண்டிட் புதன்கிழமை காலை கோவா முதல்வர் பிரமோத் சாவந்தை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களைப் பகிர்ந்துகொண்டு, கேஜிஎஃப் சூப்பர் ஸ்டாரான யாஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா மற்றும் குழுவினருடன் பனாஜியில் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments