Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் படத்தில் நடிக்க மறுத்த கேஜிஎப் புகழ் யாஷ்!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (08:44 IST)
கே ஜி எப் படங்களின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராகியுள்ளார் யாஷ்.

யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார் யாஷ். இனிமேல் அவர் பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார் என்று கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யாஷின் அடுத்த படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. யாஷின் அடுத்த படத்தை ‘மஃப்டி’ படத்தின் இயக்குனர் நர்தன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியாகி ஹிட்டான சில படங்களில் ஒன்றான பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க யாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்க்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments