Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்காவின் குரலை இப்படி பயன்படுத்துவேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை – யுவன் உருக்கம்!

vinoth
ஞாயிறு, 23 ஜூன் 2024 (07:41 IST)
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் ஒரு விஜய்யின் தோற்றம் மிகவும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திடம் டி ஏஜிங் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ நேற்று ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த பாடலை விஜய்யுடன் இணைந்து ஏ ஐ மூலமாக உருவாக்கப்பட்ட பவதாரணியின் குரலில் பாட வைத்துள்ளார்கள். இந்த பாடல் பற்றி பேசியுள்ள யுவன் “எனக்கு இந்த பாடல் மிகவும் ஸ்பெஷல் ஆனது. இந்த பாடலை நானும் வெங்கட் பிரபுவும் உருவாக்கும் போது பவதாரணி மருத்துவமனையில் இருந்தார். அவர் குணமாகி வந்ததும் அவரை பாட வைக்கலாம் என நினைத்தோம். ஆனால் ஒரு மணிநேரத்தில் அவர் இறந்த செய்தி வந்தது. அவரது குரலை நான் இப்படி பயன்படுத்துவேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. இதனை உருவாக்க என்னுடன் பணியாற்றிய குழுவுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments