Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“பொன்னியின் செல்வன் மூலமாக நிறைய கனவுகள் நிறைவேறியுள்ளன…” ஜெயம் ரவி மகிழ்ச்சி!

Jayam Ravi dream come true moment in ponniyin selvan
Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (10:12 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று புனைவு படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதையடுத்து தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான “பொன்னி நதி” பாடல் நேற்று வெளியானது. இதற்கான சிறப்பு நிகழ்ச்சி சென்னையின் பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. அதில் படக்கலைஞர்கள் ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஜெயம் ரவி “இந்த படத்தை எத்தனையோ லெஜண்ட்கள் எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் மணிரத்னத்தால் மட்டுமே அது முடிந்தது. சந்திரலேகா படம் போல பிரம்மாண்டமான ஒரு படமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் நான் நடித்ததில்லை. அந்த கனவு இந்த படம் மூலமாக நிறைவேறியுள்ளது. அதுபோல பல கனவுகள் இந்த படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளன” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் படத்துக்கு உருவாகியுள்ள எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது- வெற்றிமாறன் பொறுப்புத் துறப்பு!

ரெட்ரோ படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு!

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments