Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுசு: ஐப்பசி மாத ராசி பலன்கள்

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (15:40 IST)
கிரகநிலை: ராசியில்  குரு, சனி -  பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில்  ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  -  தொழில்  ஸ்தானத்தில்  புதன்(வ) - லாப ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. 
 

பலன்:
உங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டு அதில் வாழ ஆசைப்படும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம்  பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள்  நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம்  உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.
 
அரசியல் துறையினர் வெற்றியை படிபடியாக எட்டுவீர்கள். அனைவரின் பாராட்டும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிரிகளால் மறைமுக தொல்லைகள்  உண்டாகும். வீண் அலைச்சல்களால் மனம் வருத்தப்படும்.
 
பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல் பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர்  விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
 
மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.
 
மூலம்:
இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.
 
பூராடம்:
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். 
 
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.
 
பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருங்கள். தீவினை நெருங்காது.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 31; நவம்பர் 1.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments