Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபர்ஹானா படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து... அதிரடி முடிவெடுத்த தியேட்டர்கள்!

Webdunia
சனி, 13 மே 2023 (11:25 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே டிரைவர் ஜமுனா உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.  இந்த நிலையில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’ஃபர்ஹானா’ என்று டைட்டில் வைககப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
 
இந்நிலையில் இந்த படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன. ஆனால் அதை மறுத்துள்ள தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிராகவே, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல.
 
குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும் மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்த படம் தணிக்கையைத் தாண்டுவது மிகக் கடினம். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும்.
 
ஆனால், மேற்குறிப்பிடப்பட்டு உள்ள அந்த நாடுகளிலேயே ஃபர்ஹானா திரைப்படம் எந்த வித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இதுவே ஃபர்ஹானா எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துகிறது. இவ்வாறு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது திருவாரூரில் இருக்கும் தியேட்டர்களில் ஃபர்ஹானா படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தியேட்டர் அறிவித்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments