Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (13:51 IST)
சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


மத்திய அரசு பாடத்திட்டமான சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 16.38 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நடைபெற்றபோது பாடத்தின் கேள்விகள் சமூக வலைத்தளத்தில் லீக் ஆனதால் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளி கல்வித்துறை செயலாளர் அறிவித்திருந்தார். ஆனால், தேர்வு முடிவுகள் இன்று 3 மணி நேரம் முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.

results.gov.in, Cbse.nic.in மற்றும் cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வளருதுன்னா ஏன் துபாய்ல இருக்கீங்க?!.. மாதவனை வெளுத்த ராஜ் தாக்கரே!..

முதலமைச்சர் விஜய் வாயை திறந்தால் பல பேருக்கு ஆபத்து.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..

பாஜக பேர சொல்ல கூட பயம்!.. முதல்வருக்கு திராணி இல்லை.. உதயநிதி அட்டாக்!...

கனமழை எதிரொலி!.. தமிழகத்திற்கு வரும் காவிரி!.. விவசாயிகள் மகிழ்ச்சி!...

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு..

அடுத்த கட்டுரையில்
Show comments