Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ள முயன்ற பெண் வார்டன்

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (10:38 IST)
கோவையில் லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேபோல் கோவையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை பாலரங்கனாதபுரம் பகுதியில் தர்ஷனா என்ற பெயரில் தனியார் லேடீஸ் ஹாஸ்டல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள என 180 பேர் தங்கி உள்ளனர். புனிதா என்பவர் ஹாஸ்டல் வார்டனா பணிபுரிந்து வந்தார். 
 
இந்நிலையில் புனிதா, ஹாஸ்டல் ஓனரின் பிறந்தநாள் என்பதால் அவர் கொடுக்கும் பார்ட்டியில் கலந்து கொள்ளலாம் எனக் கூறி ஹாஸ்டலில் இருந்து 5 மாணவிகளை, ஆர்.எஸ் புரத்தில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
 
அங்கு சென்ற மாணவிகள் விருந்தில் சாப்பிட்டனர். புனிதா மாணவிகளிடம் மது அருந்துகிறீர்களா என கேட்டுள்ளார். மாணவிகள் எங்களுக்கு பழக்கமில்லை என கூறியுள்ளனர். பின் மாணவிகளிடம் நைசாக பேசிய புனிதா, நான் சொல்வது போல் செய்தால் உங்களுக்கு அதிக பணம் கிடைக்கும். ஹாஸ்டல் ஓனருடனும், அவரது நண்பர்களுடனும் உல்லாசமாக இருந்தால் நிறைய பணம் கிடைக்கும் என மூளைச்சலவை செய்துள்ளார்.
 
இதனால் பயந்துபோன மாணவிகள் அங்கிருந்து ஹாஸ்டலுக்கு வந்துள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த புனிதா நடந்தவற்றை வெளியே கூறினால் உங்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
 
இதனையடுத்து மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் புனிதா மீதும், ஹாஸ்டல் ஓனர் ஜெகநாதன் மீதும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்