“நீட் தேர்வுக்கு ஒவ்வொருவராக இழந்து வருகிறோம்” - விஷால் வேதனை
, புதன், 6 ஜூன் 2018 (15:15 IST)
‘நீட் தேர்வுக்கு ஒவ்வொருவராக இழந்து வருகிறோம்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார் விஷால்.
கடந்த ஆண்டு நீட் தேர்வுக்குப் பயந்து அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் நேற்று முன்தினம் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து
கொண்டார். இப்படி நீட் தேர்வுக்கு ஒவ்வொருவராகப் பலியாகும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால், “நீட் தேர்வுக்கு எங்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக இழந்து வருகிறோம். போராடி உயிரை மாய்த்துக் கொண்டாள் அனிதா.
தேர்வு எழுதியும் தோற்றதால் உயிரை தந்து இருக்கிறாள் பிரதீபா. இந்த செய்தி கேள்விப்பட்டதில் இருந்தே வேதனையாக இருக்கிறது.
நீட் எழுதும் மாணவர்களுக்கு எப்போதும் கைக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன், நீட் நிரந்தரம் என்றால், நீட் எழுத மாணவர்களுக்கு போதுமான வசதிகளையும், சிறப்பு வகுப்புகளையும், மன தைரியத்தையும் கல்வி துறை வழங்கிட வேண்டும். இது அரசின் கடமை. இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு ஏழை மாணவர் கூட டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது என்ற நிலை உருவாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்