Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரமாதேவியின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

Webdunia
சனி, 19 மே 2018 (12:25 IST)
வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்துள்ள ‘வீரமாதேவி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட்லுக்  போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆபாசப்பட நடிகையான சன்னி லியோன், தற்போது அதை விட்டுவிட்டு நல்ல நல்ல படங்களாகத் தேடி நடித்து வருகிறார். அந்த வகையில், பெண்ணை மையப்படுத்திய ‘வீரமாதேவி’ படத்தில் அவர் நடித்துள்ளார். வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இந்தப் படத்துக்காக, வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம்  போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு நடித்திருக்கிறார் சன்னி.
ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் பொன்சே.ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை  கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று  வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments