Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஸ்துப்படி வீட்டை அமைக்க சில குறிப்புக்கள் !!

Webdunia
வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும். வீட்டுக்குக் காலியிடம் அமைத்தால் அது வீட்டுக்கு வடக்கு, கிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும்.

கழிவு நீரை வீட்டிற்கு வடக்கு அல்லது கிழக்கில் வெளியேறுமாறு அமைக்க வேண்டும். கிணறு, ஆழ்குழாய் கிணறு போன்றவைகளை கிழக்கு அல்லது மேற்கில் அமைக்க வேண்டும்.
 
வாசல்படிகள் ஒற்றைப்படியில் அமைக்க வேண்டும். இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோ, தெற்கிலிருந்து வடக்கு நோக்கியோ ஏறும்படி அமைப்பது சிறப்பு.
 
வீட்டின் மேல் தண்ணீர்த்தொட்டி அமைக்கும் போது வீட்டின் கன்னி மூலையில் இருக்கும்படி அமைக்க வேண்டும். வீட்டிற்கு வெளியில் இருக்கும் சாலையின் மட்டத்தை விட வீட்டுத்தளம் உயரமாக இருக்க வேண்டும்.
 
வீட்டில் சமையலறை தென்கிழக்கில் கிழக்கு நோக்கி சமையல் செய்யும்படியாகவும், உணவு உண்ணும் அறை தெற்கிலும், படுக்கையறை மேற்கிலும், பூஜையறை வடகிழக்கிலும், குளியலறை கிழக்கிலும் அமைக்கப்படுவது நல்லது.
 
வீட்டின் அருகில் மா, வாழை, வேம்பு, எலுமிச்சை மரங்கள், மல்லிகைச்செடி வளர்க்கலாம். வீட்டின் அருகில் ஆலம், பனை, எருக்கு, எட்டி, வில்வம், முருங்கை, இலுப்பை மரங்களையும் பப்பாளி, அகத்தி போன்ற செடிகளையும் வளர்க்கக் கூடாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments