பரிகாரங்களை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
வாஸ்து சாஸ்திரம் என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.
ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் விளங்காது என்ற சொல்வழக்கு உண்டு. பொறாமை புகுந்த வீடு என்பதை அறியாத சிலர் கடல் ஆமையைக் கூறிவிட்டனர், உண்மையில் ஆமை புகுந்த வீட்டில் வாஸ்து தோஷம் விலகும்.
சீன வாஸ்து எனும் ஃபெங்க்சுயி முறையில் ஆமை எப்படித் தன் ஐந்து உறுப்புகளையும் (தலை மற்றும் கால்கள்) உள்ளடக்கிக்கொண்டு எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கிறது. வாஸ்து சாஸ்திரப்படி நீண்ட ஆயுளையும், விருப்பங்கள் உடனடியாக நிறைவேறுவதையும் ஆமை குறிக்கிறது.
உலோகத்தால் செய்யப்பட்ட ஆமையை, நீர் நிறைந்த ஒரு குவளையில் இட்டு, வீட்டினுள் வடக்கு திசையில் வைக்க வேண்டும். வடக்கில் படுக்கை அறை அமைந்திருக்குமானால், வெறும் உலோக ஆமையைப் பராமரிக்கலாம். இப்படிச் செய்வதால் பொருளாதார மேம்பாடு, பகைவரை வெல்லுதல், நீண்ட ஆயுள், பொறுமை முதலான பல பலன்களை நம்மால் ஈட்ட முடியும்.
ஆமை மட்டும் இல்லை, ஆமையின் கூர்மாவதாரத்தில் தோன்றிய வலம்புரி சங்கு, காமதேனு, கற்பகவிருக்ஷம் ச்யமந்தக மணி, ஐராவதம், உச்சிஸ்ரவைஸ் என அனைத்துமே வாஸ்து தோஷம் போக்கும் பொருட்களாகும்.