ஒரு வீட்டிற்கு முன்புற வாயில் பின்புற வாயில் என இரண்டு இருக்கலாம். வந்து செல்வதற்கு இரண்டு வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.
ஒரு சிலர் மூன்று வாசல் வீடு அமைப்பார்கள்.இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு,மேற்கு,வடக்கு திசையில் வாசல் அமைப்பது நலம்.
தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல அமைக்கக்கூடாது. ஒரு சில வீடுகளில்தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது.. தலைவாசலே ஒருவீட்டின் மதிப்பை நிர்ணயிக்கிறது. ஒரு வீட்டில் இரண்டு தலைவாசல்கள் வைக்க விரும்புவர்கள் கிழக்கு மற்றும் தெற்க்கில் அமைப்பது சிறந்த பலன் தரும்.
ஒரு வீட்டின் கதவுகளின் எண்ணிக்கையை பொருத்தும், அந்த வீட்டின் பலன்கள் அமைகிறது என வாஸ்து சாஸ்த்திரம் விவரிக்கிறது.