கோ வீதி: கிழக்கு மூலை தாழ்ந்து மேற்கு உயர்ந்திருக்கும் நிலப் பகுதி கோ வீதி எனப்படும். இதில் வீடு கட்டினால் அபிவிருத்தி ஏற்படும்; வளம் பெருகும்.
ஜல வீதி: கிழக்கு மூலை உயர்ந்து மேற்கு மூலை தாழ்ந்திருக்கும் நிலப்பகுதி ஜல வீதி எனப்படும். இந்த நிலத்தில் வீடு கட்டும் முயற்சியில் இறங்கக்கூடாது.
யம வீதி: வடக்கு மூலை உயர்ந்திருந்து, தெற்கு மூலை தாழ்ந்திருக்கும் பகுதி யம வீதி எனப்படும். இந்த நிலமும் வீடு கட்ட உகந்ததல்ல.
கஜ வீதி: தெற்கு மூலை உயந்திருந்து, வடக்கு மூலை தாழ்ந்திருக்கும் நிலப்பகுதி, கஜ வீதி ஆகும். இங்கு வீடுகட்டுவது விசேஷம்.
பூத வீதி: வடகிழக்கு மூலை சற்று உயர்ந்திருந்தாலும், தென்மேற்கு மூலை தாழ்ந்திருந்தாலும் அந்த நிலம் பூத வீதி ஆகும். இது, வீடுகட்டுவதற்கு உசிதமானது அல்ல.
நாக வீதி: தென்கிழக்கு மூலை உயர்ந்திருந்தாலும், வடமேற்கு மூலை தாழ்ந்திருந்தாலும் அங்கே வீடு கட்டுவது கூடாது. இதை நாக வீதி என்பார்கள்.
அக்னி வீதி: வடமேற்கு மூலை உயர்ந்திருந்து, தென்கிழக்கு பகுதி தாழ்ந்தும் உள்ள நிலப்பகுதி வீடுகட்ட சிறப்பானது. இதை அக்னி வீதி என்பார்கள்.
தான்ய வீதி: நிருதி மூலை உயர்ந்தும், ஈசான்யம் தாழ்ந்தும் உள்ள நிலப்பகுதியை தான்ய வீதி என்பார்கள். இதுவும் வீடுகட்ட உகந்ததாகும்.
வாங்கியிருக்கும் நிலம் அல்லது மனை வாஸ்து சாஸ்திரம் தவிர்க்கச் சொல்லும் அமைப்புப்படி இருந்தால், உரிய பரிகாரங்கள் மற்றும் ஹோமங்களைச் செய்துவிட்டு கட்டடப் பணிகளைத் தொடங்கலாம்.