Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாஸ்து சாஸ்திரம் என்பது என்ன? இதனை கடைப்பிடிப்பதால் நன்மை ஏற்படுமா...?

Advertiesment
வாஸ்து
“வாஸ்து” என்ற சொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது  கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.

“வாஸ்து  சாஸ்திரம்” என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். 
 
மனித குலத்தின் நலனுக்கான உணர்வு, வாழ்க்கைக்கான நியாயம் ஆகியவற்றால் உந்தப்பட்டது வாஸ்து சாஸ்திரத்தின் பூர்விகம். வாஸ் என்ற வேர்ச்சொல்லின் பொருள் “வசிப்பது, வாழ்வது, தங்குவது, இருப்பது” ஆகியவையாகும்.

திசைகள், பிரபஞ்ச ஆற்றல் ஆகியவற்றின் அறிவியல்  வாஸ்து சாஸ்திரம். பிரபஞ்ச ஆற்றல் எவ்வாறு மனித வாழ்வை பாதிக்கிறது என்று விளக்குகிறது. சூழலுடன் இணக்கமாக இணைந்து வாழ்வது  பற்றி மனித குலத்திற்கு வாஸ்து சாஸ்திரம் கற்பிக்கிறது.
வாஸ்து
ஒவ்வொரு இடத்திற்கும், அது வீடோ, பெரு நிறுவனமோ, தொழிற்சாலையோ அல்லது ஒரு நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அதற்கு 8  திசைகள் உண்டு. நான்கு முக்கிய திசைகளும் நான்கு மூலைகள். ஒவ்வொரு திசைக்கும் ஒரு சிறப்பு உண்டு. எடுத்துக்காட்டாக, வீட்டின்  முக்கிய வாசலும் அது உள்ள திசையும் அந்த வீட்டில் வாழும் மக்களின் ஆரோக்கியம், செல்வம், தொலைத்தொடர்பு ஆகியவற்றில் தொடர்பு  கொண்டது.
 
திசைகள்: மொத்தம் 8 திசைகள் உள்ளன. அதன் ஒவ்வொரு மையமும் 45 டிகிரிக்களால் வேறுபடுகிறது. அதாவது ஒவ்வொரு திசையிலும் 45  டிகிரிக்கள் உள்ளன.
 
கடிகார முனை சுற்றும் திசையில் பின்வரும் திசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
1. வடக்கு
2. வடகிழக்கு
3. கிழக்கு
4. தென்கிழக்கு
5. தெற்கு
6. தென்மேற்கு
7. மேற்கு
8. வடமேற்கு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (14-06-2019)!