Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சௌசௌ காயில் சட்னி செய்யலாம் தெரியுமா...?

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (17:53 IST)
தேவையான பொருட்கள்:

சௌசௌ - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பிலை - 1 பிடி
உப்பு - தேவைக்கு ஏற்ப.

சௌசௌ சட்னி வித்தியாசமான அசத்தலான சுவையில் இருக்கும். இதனைச் செய்வது மிகவும் எளிது. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதவகைகள் என எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமானது.


செய்முறை:

சௌசௌ, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சௌசௌ, காய்ந்த மிளகாய், தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.

வதக்கியதை ஆறவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விடவும். விரும்பினால் ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். சுவையான சௌசௌ சட்னி தயார்.

குறிப்பு: இந்த சட்னி தயார் செய்ய இளம் சௌசௌவை தேர்வு செய்யவும். சௌசௌ கலவையை அதிக நேரம் அடுப்பில் வைத்து வேக விட்டால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments