Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புதமான சுவையில் கனவாய் மீன் வறுவல்..!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கனவாய் மீன் - கால் கிலோ
மிளகாய்த் தூள் -  2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 2 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சின்னவெங்காயம் - 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 6
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் - 1 
மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்
செய்முறை:
 
மீனை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2  நிமிடம் இருபுறமும் வேக விட்டு  எடுக்கவும். 2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும். 
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக  வதக்கிவிட்டு,  சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன்பு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments