Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகாசமான சுவையில் பருப்பு பாயசம் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பாசி பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - ஒரு கைப்பிடி
பச்சரிசி - ஒரு கைப்பிடி
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் - அரை மூடி
நெய் - தேவையான அளவு
ஏலக்காய், முந்திரி - தேவையான அளவு
 
செய்முறை:
 
கடாயில் பருப்புகளை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் வறுத்த பருப்பு அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர்  ஊற்றி வேகவைக்கவும். வெல்லத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிக்கட்டவும். தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் விட்டு  அரைத்து எடுத்துக் கொள்ளவும். 
 
வெந்த பருப்பு அரிசி கலவையில் காய்ச்சிய வெல்லத்தை ஊற்றவும். பின்னர் அரைத்த தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.  அதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்கவும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும். சுவையான ப்ருப்பு பாயசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments