Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
பனை வெல்லம் (கருப்பட்டி) - 1/2 கிலோ
ஏலக்காய் - 10
தேங்காய் - 1
சுக்கு - 1/2 அங்குல நீளம்
செய்முறை:
உளுத்தம்பருப்பை வாசம் வரும்வரை லேசாக வறுத்துக் கொள்ளவும். ஆறிய பின் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். தேங்காயை துருவி முதல் பால் 1/4 லிட்டர் அளவும், இரண்டாம் பால் 1/4 லிட்டர் அளவும் எடுக்கவும்.
உளுத்தம் பருப்பை கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கருப்பட்டியை நசுக்கி 1/2 லிட்டர் வெந்நீரில் கரைத்துக்கொள்ளவும். சுக்கையும், ஏலக்காயையும் பொடியாக்கி மாவுடன் சேர்க்கவும்.
கருப்பட்டியை கரைத்த நீரை வடிகட்டி மாவுடன் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து திக்காக வரும் போது ஒரு சிட்டிகை உப்பும், இரண்டாம் தேங்காய்ப்பாலும் சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து முதல் தேங்காய் பாலை ஊற்றி கொதி வராமல் இறக்கவும். உடல்நலம் காக்கும் உளுத்தங்கஞ்சி தயார்.