நினைவுத்திறனை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி....!

Webdunia
இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. ஆரோக்கியம் தந்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை  கீரை சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
 
வல்லாரை கீரை - அரை கட்டு
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
மிளகு - கால் டீஸ்பூன்
புளி - ஒரு கோலி குண்டு அளவு
வெல்லம் - சிறிதளவு
எண்ணெய் - தேவைகேற்ப
உப்பு - தேவைகேற்ப
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
 
கடாயில் சுத்தம் செய்து நறுக்கிய கீரை போட்டு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த  மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
ஆறியதும் இரண்டு கலவையும் சேர்த்து உப்பு, புளி சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேபில்லை போட்டு தாளித்து அதில் சேர்த்து இறக்கவும். சுவையான ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை  கீரை சட்னி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments