Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருமையான சுவையில் காளான் சமோசா செய்ய...!

Webdunia
மாலை வேளை ஸ்நாக்ஸ்கள் என்று அவ்வப்போது வடை, பஜ்ஜி போன்றவைதான் ஈஸி என்று நினைத்து, அதனையே செய்து சாப்பிடுவோம். ஆனால் வடை, பஜ்ஜி போன்றே, மிகவும் எளிதாக சமோசாக்களையும் செய்யலாம். அதுவும் காளான் சமோசாவை எளிதில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
 
மைதா மாவு - 1 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
 
உள்ளே வைப்பதற்கான மசாலா செய்ய:
 
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பட்டன் காளான் - 300 கிராம் (பொடியாக வெட்டியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும்  பிசைந்து கொள்ளவேண்டும். 
 
பின்னர் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், காளான், பச்சை  மிளகாய், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும்வரை நன்கு வதக்க வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி,  கொத்தமல்லி தூவி இறக்கி, குளிர வைக் வேண்டும். 
 
பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை  பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும். 
 
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான அருமையான  காளான் சமோசா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments