சுவையான சௌசௌ சட்னி செய்ய !!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (16:37 IST)
தேவையான பொருட்கள்:

சௌ சௌ - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு- கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பிலை - 1 பிடி
உப்பு - தேவைக்கு ஏற்ப



செய்முறை:

சௌ சௌ, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சௌ சௌ, காய்ந்த மிளகாய், தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.

வதக்கியதை ஆறவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விடவும்.

தேவைப்பட்டால் ஒரு பெரிய வெங்காயம் சேர்த்தும் அரைத்துக் கொள்ளலாம். சுவையான சத்தான சௌ சௌ சட்னி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?.. சுகாதார மையம் கூறிய நெறிமுறைகள்!..

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments