சுவையான இஞ்சி குழம்பு செய்ய !!

Webdunia
தேவையானவை:
 
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3
புளி - சிறிதளவு
பூண்டு - 20 பல்
இஞ்சி - 25 கிராம்
வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிதளவு

செய்முறை:
 
முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும். பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும். மூன்றையும் மையாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
 
அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். 1 டம்ளர் தண்ணீர் விடவும். புளி கரைத்த தண்ணீர் சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடி எல்லாம் சேர்க்கவும். நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நல்ல  மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

அடுத்த கட்டுரையில்
Show comments