தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு - 250 கிராம்
பச்சரிசி - 250 கிராம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
செய்முறை:
பச்சரிசியை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். மரவள்ளி கிழங்கு தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவும். அரிசி நன்றாக ஊறியதும் அதனுடன் சீரகம், வெந்தயம், பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
மரவள்ளி கிழங்கையும் அரைத்து மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அதிக நேரம் புளிக்க வைக்க தேவையில்லை. 2 லிருந்து 3 மணி நேரம் வைத்து தோசை வார்க்கலாம். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து மெல்லிய தோசையாக வார்த்தெடுக்கவும். விருப்பத்திற்கேற்ப எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக்கொள்ளலாம். சத்துள்ள சுவையான மரவள்ளி கிழங்கு தோசை தயார்.