Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீரண சக்தியை அதிகரிக்கும் பிரண்டை துவையல் !!

Webdunia
தேவையான பொருட்கள்:

பிரண்டை - 1 கட்டு
உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 துண்டு
காய்ந்த மிளகாய் - 5 முதல் 6
தேங்காய் - 1 துண்டு
புளி - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்கயத்தூள் - கால் டேபிள் ஸ்பூன்

செய்முறை:
 
முதலில் பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பினை சேர்க்கவும்.
 
உளுத்தம்பருப்பு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பின் பூண்டு, இஞ்சி இரண்டையும் சேர்க்கவும். சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளவும். கால் டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
 
தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்க்கவும். பிரண்டை வதங்கும் வரை நன்கு வதக்கி கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
 
இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின் ஆறவைக்கவும். சூடு ஆறிய பின் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். சுவையான சத்தான  பிரண்டை துவையல் தயார். துவையலில் புளி சேர்ப்பது மிகவும் அவசியமாகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments